எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை

டெல்லி, ஆகஸ்ட். 9 – பாராளுமன்ற மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன. இந்த தீர்மானத்தின்மீது நேற்று விவாதம் தொடங்கியது. இன்று விவாதம் தொடர்ந்து நடைபெற இருக்கிறது. இந்த விவாதத்தின்போது, ஆளுங்கட்சி எம்.பி.க்களை எவ்வாறு எதிர்கொள்வது, விவாதங்களை எப்படி எடுத்து வைப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்த, எதிர்க்கட்சிகள் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு மக்களவையில் எம்.பி.க்கள் இருக்கும் என்றால், அதன் தலைவர்களுக்கு இடையிலான கூட்டம் 10.30 மணியில் நடைபெற இருக்கிறது. அதேபோல், காங்கிரஸ் மக்களவை எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் 10 மணிக்கு நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டம் காங்கிரஸ் பாராளுமன்ற கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இருக்கிறது.