என்டிஏ தலைவராக மோடி ஒருமனதாக தேர்வு – 8ம் தேதி பிரதமராக பதவியேற்பு

புதுடெல்லி, ஜூன் 5-
தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் இன்று நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின்
21 கட்சிகள் கூட்டத்தில் மோடியை தேர்வு தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி வரும் 8ம் தேதி பதவியேற்கிறார். இதன் மூலம் ஜவஹர்லால் நேருவின் ஹாட்ரிக் சாதனையை மோடி சமன் செய்வார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் ஏழைகள், பெண்கள், விவசாயிகள், இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிப்பது என்றும் கூறப்பட்டு உள்ளது
இந்த கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் என். சந்திரபாபு நாயுடு, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, எல்ஜேபி தலைவர் சிராக் பாஸ்வான் உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்