
லண்டன், மார்ச்3- கங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது ராகுல் காந்தி பேசியதாவது: – ஜனநாயகத்திற்கு அவசியமான அமைப்பு கட்டமைப்புகள் கட்டுபடுத்தப்படுகின்றன. இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பான ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்தி என்னையும் அரசு வேவு பார்த்தது. பெகாசஸ் உளவு செயலி குறித்து உளவுத்துறை அதிகாரிகள் என்னை எச்சரித்தனர். அரசியல் கட்சித்தலைவர்கள் பலரது செல்போன்களில் பெகாசஸ் ஓட்டுக்கேட்பு மென்பொருள் உள்ளது.. என்னுடைய செல்போனிலும் பெகாசஸ் இருந்தது, போனில் கவனமாக பேசுங்கள் என எச்சரித்தனர்” என்றார்.
இதற்கிடையே ராகுல் காந்தியின் பேச்சுக்கு பிஜேபி தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அவர் உண்மைக்கு புறம்பான தகவலை உலகிற்கு தெரிவித்து வருகிறார் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் வகையில் பேசி வருகிறார். என்று பிஜேபி பல்வேறு மட்ட தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர் இது தொடர்பாக சமூக வலைத்தளங்களிலும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் .இதற்கு காங்கிரஸ் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது ராகுல் காந்தி பேசியது அனைத்தும் உண்மைதான் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு இது தொடர்பான முறையான விசாரணைகள் நடத்தப்படும் என்று காங்கிரஸ் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது