என்னை விடுவார்களா?டி.கே. சிவகுமார் கேள்வி

பெங்களூர் : ஜூலை. 28 – அமலாக்கத்துறை அதிகாரிகளின் முன்னர் இம்மாதம் 30 அன்று விசாரணைக்கு ஆஜராவேன் என மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி கே சிவகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து நாளை டெல்லிக்கு செல்ல உள்ளேன். கட்சி தலைவி சோனியா காந்தி மற்றும் கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் ராகுல் காந்தி அகியோரையே விட்டு வைக்க வில்லை. பின்னர என்னை விட்டு வைப்பார்களா என சிவகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னப்பட்டணாவில் உள்ள கௌடகெரேவில் உள்ள சாமுண்டேஸ்வரியின் கோயில் திருவிழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவகுமார் அமலாக்கத்துறையின் விவகாரத்தில் என்னை சிக்க வைக்க பலர் முயற்சித்து வருகின்றனர் என தீவிர குற்றச்சாட்டை சிவகுமார் தெரிவித்துள்ளார். நான் தவறு எதுவும் செய்யவில்லை என்றால் இந்த அன்னை என்னை காப்பாற்றுவாள் . சிலர் எந்தெந்த ஆசைகளையோ கொண்டுள்ளார். என்னை சிக்க வைக்க என்னவெல்லாமோ முயற்சிகள் செய்தபடி உள்ளனர். இது குறித்து நிதானமாக பொது மக்களுக்கு தெரிவிப்பேன் என டி கே சிவகுமார் தெரிவித்துள்ளார்.