என்.டி.ராமராவ் உருவம் பொறித்த 100 ரூபாய்நாணயம்- ஜனாதிபதி வெளியிடுகிறார

திருப்பதி:ஆகஸ்ட். 26 – ஆந்திராவில் பிரபல நடிகரும், முன்னாள் முதலமைச்சருமான என்.டி.ராமராவ்நூற்றாண்டு விழா விமர்சையாககொண்டாடப்பட்டு வருகிறது.என்.டி. ராமராவின் நூற்றாண்டுவிழாவை முன்னிட்டு மத்திய
அரசு 100 ரூபாய் நாணயத்தைவெளியிட முடிவு செய்தது.அதன்படி 44 மில்லி மீட்டர்சுற்றளவு கொண ்ட நாணயம்தயார் செய்யப்பட்டுள்ளது.அதில் 50 சதவீதம் வெள்ளியும்,40 சதவீதம் செம்பு, 5 சதவீதம்துத்தநாகம், 5 சதவீதம் நிக்கல்கலந்து செய்யப்பட்டு உள்ளது.நாணயத்தின் ஒரு புறத்தில்3 சிங்கங்களுடன் அசோகசக்கரமும், மறுபுறத்தில் என்.டி.ஆர். ராமராவ் உருவம் பதித்து,அதன் கீழ் இந்தியில் நாதமுரிதாரக ராமராவ் சத்ஜெயந்தி 1923-2023 என அச்சிடப்பட்டுள்ளது.
நாணய வெளியிட்டு விழாநாளை மறுநாள் நடக்கிறது.டெல்லியில் உள்ளராஷ்டிரபதிபவனில் ஜனாதிபதி திரவுபதிமுர்மு வெளியிடுகிறார். நாணயவெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளஎன்.டி.ராமராவின் மகன்கள்,மகள்கள் மற்றும் குடும்ப
உறுப்பினர்களுக்கு ஏற்கனவேஅழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.