எம்எல்ஏ மகள் போலிசுக்கும் வாக்குவாதம்

பெங்களூரு , ஜூன் 10
கர்நாடகா பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான அர்விந்த் நிம்பவாலி மகள் அண்மையில் பிஎம்டபிள்யூ சொகுசு காரில் சிக்னலில் நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை தடுத்து நிறுத்திய போக்குவரத்து காவலர்கள் அபராதம் கேட்டுள்ளனர். ஆனால் அப்பெண் தான் எம். எல்.ஏ.வின் மகள் என கூறியதோடு, எம். எல்.ஏ வாகனங்கள் சிக்னலில் நிற்க வேண்டிய தேவை இல்லை எனவும் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்படவே, இதனை படம் பிடிக்க முயன்ற கேமராமேன் மற்றும் பத்திரிகையாளரையும் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். அவர் மீண்டும் காருக்குச் சென்று டிரைவர் இருக்கையில் அமர்ந்தார்.அபராதத் தொகையை செலுத்துமாறு காவலர் அவருக்கு அறிவுறுத்துகிறார். “இப்போது என்னிடம் பணம் இல்லை,
தயவுசெய்து யாரையாவது வீட்டிற்கு அனுப்புங்கள். அபராதத்தை நான் செலுத்துகிறேன்,” என்று அவள் காவல்துறையினரிடம் கூறுகிறாள். அவளால் ஆன்லைனிலும் பணம் செலுத்தலாம் என்று போலீசார் சொல்கிறார்கள். காரில் இருந்தவாரு அந்த பெண் தனது வங்கி அட்டையைப் பயன்படுத்தி அபராதத்தைச் செலுத்தி, அவர் ஓட்டுவதற்கு முன் ரசீதைப் பெறுகிறார். இது குறித்து எம்.எல்.ஏ கூறும் போது வியாழன் மாலை நடந்த சிறிய பிரச்சினை பற்றி நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். ராஜ் பவன் அருகே எனது மகளும் அவரது நண்பர்களும் காரில். அதிவேகமாக சென்ற தருணுக்கு போலீசார் அபராதம் விதிக்கபட்டு கட்டி உள்ளனர். எனது மகள் பத்திரிகையாளர்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதாக கூறப்பட்டது. நானும் வீடியோ பார்த்தேன். எங்கள் குடும்ப அப்படிபட்டது இல்லை. என் மகள் யாரையாவது புண்படுத்தியிருந்தால், அவர் சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.