எம்ஜிஆர் ஜெயலலிதா நினைவிடத்தில் போலீஸ் குவிப்பு

சென்னை, ஜூன். 22 –
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் புயலை கிளப்பி இருக்கிறது. இந்த விவகாரத்தில் கடும் அதிருப்தியில் உள்ள அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தொடர்ந்து தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அதேவேளை அவரை சமாதானப்படுத்த அக்கட்சி முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் அசராமல் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ஜெயலலிதா நினைவிடத்தில் தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக இணைச் செயலாளர் கேசவன் என்பவர் நேற்று தீக்குளிக்க முயன்றார். அவரை பாதுகாப்பு பணியில் இந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். தற்போது அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் பாதுகாப்பு கருதி எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடத்தில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் , நினைவிடத்திற்கு வரும் பொதுமக்களை சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கின்றனர்.