எம்ஜிஆர் வழியில் ஒற்றுமையாய் செயல்படுவோம் – ஓபிஎஸ்

சென்னை, ஜனவரி. 17 – அ.தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 106 வது பிறந்த நாளை முன்ன்னிடு தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 106-வது பிறந்தநாளில் அன்னாரது வழியில் ஒற்றுமையாய் செயல்படுவோம் என தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவ்ல் கூறியிருப்பதாவது, தனது கடும் உழைப்பாலும், விடா முயற்சியாலும் வானளவு உயர்ந்து, நடிப்பால் ரசிகர்களை ஈர்த்து, பொதுவாழ்க்கையில் முதலமைச்சராக பல சரித்திர திட்டங்களை நிறைவேற்றி, மக்கள் மனதில் நீங்காது வாழும் புரட்சித்தலைவர் #MGR அவர்களின் 106-வது பிறந்தநாளில் அன்னாரது வழியில் ஒற்றுமையாய் செயல்படுவோம்! இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.