எம்.ஜி.சாலை, இந்திராநகர் இடையே நாளை மெட்ரோ ரயில் சேவை நிறுத்தம்

பெங்களூரு, பிப். 10: எம்.ஜி.சாலை, இந்திராநகர் இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.இது குறித்து பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: எம்.ஜி.சாலை, இந்திராநகர் இடையே நாளை காலை 7 மணி முதல் 9 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக நாளை மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
எனவே எம்.ஜி.சாலை, செல்லகட்டா இடையேயும், இந்திராநகர், ஒயிட்பீல்டு இடையே மட்டும் அந்த நேரத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். காலை 9 மணிக்கு பிறகு வழக்கம் போல ரயில் சேவைகள் இயக்கப்படும். பச்சை வழித்தடத்தில் வழக்கம் போல எந்த மாற்ற்மும் இல்லாமல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.