எம்.பி.யின் ரூ.29 கோடி சொத்துகள் முடக்கம்

புதுடெல்லி: ஏப். 1: பண மோசடி வழக்கில் முன்னாள் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யும், அல்கெமிஸ்ட் குழுமத்தின் தலைவருமான கே.டி. சிங் சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. அல்கெமிஸ்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் மற்றும் அல்கெமிஸ்ட் டவுன்ஷிப் இந்தியா லிமிடெட் நிறுவனங்கள் பொதுமக்களிடமிருந்து ரூ.1,800 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.
அதிக வருமானத்தை வழங்குவதாகவும், பொதுமக்களின் முதலீட்டுக்கு அதிக வட்டி விகிதம் தவிர கூடுதலாக வீட்டு மனைகள், வில்லாக்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்குவதாக கூறி அந்த நிறுவனங்கள் நிதி மோசடியில் ஈடுபட்டதாக சிபிஐ, உத்தர பிரதேச காவல் துறை மற்றும் மேற்கு வங்க காவல் துறை ஆகியவை வழக்குப்பதிவு செய்தன.