எரிவாயு கசிந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

மாஸ்கோ: நவம்பர். 20 – ரஷியாவின் தென்கிழக்கு பகுதியைச் சேர்ந்த ஷாக்லீன் தீவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பில் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் திடீரென காஸ் கசிந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 9 பேர் பலியாகினர் என முதல்கட்ட தகவல்கள் வெளியாகின. விசாரணையில், 1980-ம் ஆண்டில் கட்டப்பட்ட குடியிருப்பு என்பதும், காஸ் கசிவால் விபத்து நடந்தது உறுதிபடுத்தப்பட்டது. இதில் 4 குழந்தைகளும் பலியாகினர்.

மேலும், 33 பேரை தேடும் பணி நடந்து வருகிறது.

என அம்மாகாண கவர்னர் தெரிவித்தார்.