எரிவாயு சிலிண்டர் வெடித்து 6 பேர் கவலைக்கிடம்

பெங்களூர்,ஜனவரி.16 –
பெங்களூரில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்தது. இதில் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது வீட்டில் இருந்த 6 பேர் படுகாயம் அடைந்தனர. இந்த வீட்டின் அக்கம் பக்கத்தில் இருந்த ஐந்து வீடுகள் சேதம் அடைந்தன பெங்களூர் எலகங்கா பகுதியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி லே அவுட்டில் இன்று காலை இந்த துயர சம்பவம் நடந்தது
இந்த சமையல் சிலிண்டர்எரிவாயு வெடிப்பால் ஐந்து வீடுகள் சேதமடைந்திருப்பதுடன் இந்த வீடுகளின் ஓடுகள் மற்றும் சுவர்கள் இடிந்துள்ளன. இந்த தீ விபத்தில் காயமடைந்த பானு (50) , சல்மா (22) , ஷாஹீத் (16) , அஸ்மா (50) , மற்றும் அப்ரோஸ் (23) ஆகியோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வரினும் இவர்களின் நிலைமை கவலைக்கிடமாயுள்ளது. இந்த விபத்தால் லால் பகதூர் சாஸ்திரி லே அவுட் வாசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அக்கம் பக்கத்து நான்கைந்து வீடுகள் முழு சேதமடைந்துள்ளன . இந்த விபத்தால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பாதிப்புகளுக்குள்ளாகியுள்ளனர். இவர்களுக்கு எலஹங்கா அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வீட்டில் சிலிண்டர் வெடிக்க என்ன காரணம் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இதற்கு இடையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆறு பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரியவந்துள்ளது அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.