எருமை மீது மோதி பற்றி எரிந்தகார்

மாண்டியா, செப்.5- நெடுஞ்சாலையில் சென்ற எருமை மாடு மீது கார் மோதி தீப்பிடித்து எரிந்த சம்பவம் மண்டியா மாவட்டம் நாகமங்களா தாலுக்காவில் உள்ள பெல்லூர் கிராஸ் அருகே நடந்தது.
பெங்களூரு – மங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, ​​காரின் குறுக்கே எருமை மாடு ஒன்று வந்தது. அதன் மீது மோதாமடை இருக்க முயற்சி செய்தபோதும் கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மோதியது.
அபபோது காரில் தீப்பிடித்து கார் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. அதிர்ஷ்டவசமாக காரில் இருந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.