எல்லையில் பைடன்

எல் பாசோ, : ஜனவரி. 9 – அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின் முதல் முறையாக ஜோ பைடன் அமெரிக்க- மெக்சிகோ எல்லைக்கு சென்றார். அங்கு சட்டவிரோத குடியேற்றம் மற்றும் கடத்தல் தொடர்பான விவாதங்களின் மையமான டெக்சாஸின் எல் பாசோ பகுதிக்கு அவர் சென்றார். மெக்சிகோ மற்றும் கனடாவின் தலைவர்களுடன் பிராந்திய உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவர் மெக்சிகோ நகரத்திற்குச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.