எல்லையில் ராணுவ வீரர்களுக்கு ராக்கி கயிறு கட்டிய பெண்கள்

ஜம்மு- ஆக.30- காஷ்மீர் மாநிலம் இந்திய எல்லையில், ஆக்னூர் செக்டாரில் பாதுகாப்புப் பணியில ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ராணுவ வீரர்களுக்கு, ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு பெண்கள் ராக்கி கயிறு கட்டினர். இதனை ஏற்றுக் கொள்வதன் மூலம் ஓர் ஆண், அந்தச் சகோதரியின் பாதுகாப்பிற்கும், வாழ்க்கை நலத்திற்கும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி கூறுவதாகக் கருதப்படுகிறது. ராக்கி கட்டியவுடன் சகோதரன், அந்த அன்புச் சகோதரிக்கு ஒரு பரிசு (அல்லது பணம்) அளிப்பது வழக்கம்.