எல்லையில் வீரர்கள் எண்ணிக்கை குறைப்பு

புதுடில்லி, செப். 9- லடாக் எல்லையில் வீரர்கள் எண்ணிக்கையை குறைக்க இந்திய – சீனா இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.கிழக்கு லடாக் எல்லையில், 2020ல் சீனா தன் படைகளை திடீரென குவித்தது. இதையடுத்து, இந்தியாவும் அங்கு வீரர்களை குவித்தது. இதையடுத்து, எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டது. எல்லை தாண்டி சீன ராணுவத்தினர் கல்வான் பள்ளத்தாக்கில் நுழைய முயன்றபோது, இருதரப்பினர் இடையே கடும் சண்டை ஏற்பட்டது.இதில், இந்திய வீரர்கள் 20 பேரும், சீன ராணுவத்தினர் 50 பேரும் உயிரிழந்தனர். கிழக்கு லடாக் எல்லையில் இரு நாடுகளும் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரித்தன. இரு நாடுகளும், 50 – 60 ஆயிரம் வீரர்களை குவித்தன.Latest இதைத் தொடர்ந்து இருதரப்பு ராணுவ அதிகாரிகளிடையே தொடர் பேச்சு நடந்தது. ஜூலையில் நடந்த 16வது சுற்று பேச்சில், எல்லையில் குவித்துள்ள வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க இருதரப்பு அதிகாரிகளிடையே சுமுக உடன்பாடு ஏற்பட்டது.இதையடுத்து, கிழக்கு லடாக்கின் கோக்ரா- – ஹாட்ஸ்பிரிங்ஸ் பகுதியில் இருந்து நேற்று முதல் இரு நாட்டு வீரர்களும் திரும்ப பெறப்படுகின்றனர்.நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயை பாலி தீவில் சந்தித்து பேசிய அடுத்த 10 நாட்களில், 16வது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது.