எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 6 மீனவர்களை கைது

கொழும்பு, ஜூலை . 21 –
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அவ்வப்போது கைது செய்து வருவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில், தலைமன்னார்,
தனுஷ்கோடி இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 6 மீனவர்களை கைது செய்து ஒரு விசைப் படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களை உடனே தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்ற இலங்கை கடற்படை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.