எளிமையான முறையில் தசரா

பெங்களூரு, செப். 22-
கர்நாடக மாநிலத்தின் நிலவும் வறட்சி மற்றும் விவசாயிகள் படும் அவதி காரணமாக இந்த முறை உலக புகழ்பெற்ற மைசூர் தசரா விழாவை எளிமையாக கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது இதனால் பிரம்மாண்ட விழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
உலகப்புகழ் பெற்ற மைசூர் தசராவின் பிரமாண்ட கொண்டாட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த முறை எளிமையான தசரா விழா நடைபெறவுள்ளது.
மாநிலத்தில் நிலவும் வறட்சி காரணமாக மைசூர் தசரா விழாவை எளிமையாகவும் பாரம்பரிய முறையிலும் கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது.முன்னதாக இந்த முறை தசரா விழாவை சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. மாநிலத்தில் நிலவும் வறட்சியால் தசராவை பிரமாண்டமாக நடத்த வேண்டாம், எளிமையாக தசராவை கொண்டாடுவோம் என்ற முடிவுக்கு அரசு வந்துள்ளது.
சமூக நலத்துறை மற்றும் மைசூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் டாக்டர். எச்.சி.மகாதேவப்பா இந்த தகவலை தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் போதிய மழை இல்லாததால், வறட்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கோலாகலமான தசரா விழா கொண்டாட்டம் இல்லை அதே சமயம் பாரம்பரிய முறையில் அர்த்தமுள்ள விழாவாக இந்த தசரா இனிமையான முறையில் கொண்டாடப்படும் என்று தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்
விவசாயிகளின் துயரத்திற்கு உதவும் வகையில் இந்த முறை தசராவை எளிமையாக கொண்டாட முடிவு செய்துள்ளதாக அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
மாநிலத்தில் காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்த பின், முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்த உயர்நிலைக் கூட்டத்தில், 2 மாதங்களுக்கு முன் தசரா விழாவை பிரம்மாண்டமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. தற்போது வறட்சி நிலவி வருவதால், பிரமாண்டமான முடிவில் இருந்து அரசு பின்வாங்கி, எளிமையான பாரம்பரிய தசராவை நடத்த முடிவு செய்துள்ளது.
மைசூர் தசரா கொண்டாட்டத்தின் சிறப்பு அம்சமான ஜம்பூசவாரியில் பங்கேற்பதற்காக கஜ படை ஏற்கனவே மைசூரு வந்தடைந்த நிலையில் அவைகளுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.
கௌரி-விநாயகர் பண்டிகையையொட்டி ஜம்புசவாரியில் அம்பாரி ஏந்தி அபிமன்யு தலைமையில் அர்ஜுனன், பீமா, மகேந்திரா, தனஞ்சய, கோபி, கஞ்சன், விஜயா, வரலட்சுமி யானைகள் மைசூரில் முகாமிட்டன. 18ம் தேதி கஜபதிக்கு சிறப்பு பூஜை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது