எஸ்டிபிஐ , பிஎப்ஐ தடை குறித்து மத்திய அரசு முடிவு செய்யும் : ஈஸ்வரப்பா

பெங்களூர் : செப்டம்பர். 22 – எஸ் டி பி ஐ மற்றும் பி எப் ஐ ஆகிய இயக்கங்களை தடை செய்யும் அவசியம் இருப்பதுடன் இது குறித்து மத்திய அரசு நடவடிக்கைமேற்கொள்ளவுள்ளது என பி ஜே பி பிரமுகர் கே எஸ் ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார். இந்த இரண்டு இயக்கங்களை தடை செய்யும் விஷயத்தை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டுவந்திருப்பதாகவும் ஈஸ்வரப்பா தெரிவித்தார். மல்லேஸ்வரத்தில் உள்ள பி ஜே பி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஈஸ்வரப்பா சோதனைகளின் போது சிக்கியுள்ள தீவிரவாதிகள் அனைவரும் முஸ்லீம்களே . ஆனால் அனைத்து முஸ்லீம்களும் தீவிரவாதிகள் என நான் சொல்லமாட்டேன். தீவிரவாதிகளை வளர்க்க வேண்டாம் என நாங்கள் காங்கிரசுக்கு சொல்லியபடியே உள்ளோம். காங்கிரஸ் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தவில்லையென்றால் தேச விரோதிகளுக்கு ஆதரவு அளித்தது போலாகும். சிவமொக்காவில் கைதாகியுள்ள மூன்று தீவிரவாதிகள் பி ஜே பியை சேர்ந்தவர்களா ? என்றும் ஈஸ்வரப்பா கேள்வி எழுப்பினார். அவர்களுக்கு உற்ச்சாகம் அளித்தது யார் ? தேசத்துரோகிகளா அல்லது தேச பக்தர்களா ? என்ற மனநிலை புரிய வேண்டும். தேச துரோகம் செய்பவர்கள் தேச பக்தர்கள் மீது கச்சா வெடிகுண்டு தயாரித்து வீசுகின்றனர். இங்கு நாம் பி ஜே பி , ம ஜ தா , காங்கிரஸ் என மோதிக்கொள்ளக்கூடாது. வெறும் முஸ்லீம்களின் ஓட்டுக்காக மோதிக்கொண்டால் தேசதுரோக வேலை செய்வதுபோலாகிவிடும் . இவ்வாறு ஈஸ்வரப்பா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.