எஸ்மா சட்டம் பாயும் அரசு எச்சரிக்கை


பெங்களூரு: ஏப்ரல். 8. – அரசு ஊழியர்களுக்கு அளித்துவரும் ஆறாவது ஊதிய ஆணைய பரிந்துரைகளுக்கேற்ப சம்பளம் கொடுக்க முடியாது. ஆனால் நிறுவனத்தின் பொருளாதார நிலைமையை கவனத்தில் கொண்டு சம்பளம் உயர்த்தப்படும் என்று உறுதியளித்திருப்பதாக மாநில போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் அஞ்சும் பர்வேஷ் தெரிவித்துள்ளார்.

விகாச சௌதாவில் பத்திரிகையாளர்களிடம் அவர் பேசுகையில் ” விஜயபுரா மற்றும் சாமராஜநகரில் குடியிருப்புகளை காலி செய்ய கொடுத்த நோட்டீசிகளுக்கு தடை விதித்துள்ளோம். எவரையும் வீட்டை காலி செய்ய சொல்லமாட்டோம். ஆனாலும் எஸ்மா சட்டத்தை நடைமுறை படுத்த வாய்ப்புகள் உள்ளன. ஜூன் மாதம் வரை எஸ்மா சட்டத்தை நடைமுறை படுத்த தொழிலாளர் துறை வாய்ப்பு அளித்துள்ளது. அதற்கேற்ற நிலைமை வநதால் எஸ்மா சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். போக்குவரத்து பிரிவுகளில் 20 ஆயிரம் பஸ்கள் உள்ளன. தினசரி 40 லட்ச மக்கள் பயணிக்கிறார்கள். இன்றைய பஸ் நிறுத்த போராட்டத்தால் மக்களுக்கு மிகவும் சிரமங்களை ஏற்பட்டுள்ளன. இதற்கு முழு அளவில் மாற்று வசதிகள் செய்து கொடுக்க வாய்ப்புகள் இல்லாத போதிலும் முடித்த அளவிற்கு வசதிகள் செய்வோம். மாநில போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியர்களாக ஏற்றுக்கொள்ள முடியாது. என ஏற்கெனவே அரசு மிக தெளிவாக கூறியுள்ளது. யார் யார் போராட்டம் நடத்துகிறார்கள் மற்றும் அவர்களை யார் யார் தூண்டி விடுகிறார்கள் அவர்கள் அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுப்போம். இந்த போராட்டத்தால் நாளொன்றுக்கு 20 கோடி ரூபாய் நஷ்டம் உண்டாகின்றது. இந்த கணக்கில் ஏற்கெனவே இரண்டு நாட்களில் 40 கோடி நஷடம் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்களின் அடம் பிடிக்கும் போக்கை விட்டு பணிக்கு வாருங்கள் என கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் இப்போதும் அவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளோம். ஆனால் அவரகள் தங்கள் பிடிவாதத்தை விட்டு வரட்டும். உடனடி பரிகாரமாக 10 சதவிகித சம்பள உயர்வுக்கு நாங்கள் தயார். மீதமுள்ள 2 சதவிகிதத்தை முன் வரும் நாட்களில் அதிகரிப்போம் ” இவ்வாறு அஞ்சும் பரமேஷ் தெரிவித்துள்ளார்.