எஸ்.எஸ்.எல்.சி தேர்வு டிரோன் மூலம் கண்காணிப்பு

பெங்களூர், ஆக.7- கர்நாடக மாநிலத்தில் நடக்க இருக்கும் எஸ். எஸ். எல். சி. தேர்வு என்பது கூடுதல் பாதுகாப்புக்காக ‘ட்ரோன்’ கேமரா பொருத்தப்படும் என்று கல்வித் துறை தீர்மானித்துள்ளது.
இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு தேர்வு மையங்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. சுற்றுப்புற பகுதிகளில் கண்காணிக்கவும், முறைகேடுகளை தடுக்கவும் ஆளில்லா விமானத்தை தேர்வு மையங்களுக்கு மேல் நிறுத்தப்படும்.
இது புதுமையான முயற்சி. நியாயமான மற்றும் பாதுகாப்புக்காக தேர்வு சூழலை உறுதி செய்யும் திட்டமாக அமல் படுத்தப்படுகிறது.
சமீபத்தில் நடந்த கல்வித் துறை அதிகாரிகள் கூட்டத்தில், எஸ். எஸ். எல். சி., தேர்வில் பெருமளவில் நகல் எடுக்கப்பட்ட சம்பவங்கள் குறித்து மூத்த அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்.
நகல் எடுக்க உதவிய 38 பேரை கல்வித்துறை சஸ்பெண்ட் செய்துள்ளது. குறிப்பாக வட கர்நாடகாவில்இச்சம்பவம் அதிகமாக நடந்துள்ளது
விஜயபுரா, யாத்கிர், பெல்காம், பீதர், சிக்கோடி ஆகிய இடங்களில் இத்தகைய முறைகேடுகள் நடந்துள்ளன .இங்கு பள்ளி தேர்வில் க்யூ.ஆர். கோடு குறியீடுகள் அறிமுகப் படுத்தப் படும். வினாத்தாள்களை ஏ, பி, சி, டி, அறிமுகப் படுத்தப்படுகிறது. தேர்வு மையங்களை ட்ரோன் கேமராக்கள் கண்காணிக்கும்.
இம்முறை தேர்வு கடுமையாக பாதுக்காக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
நீட் முறை பயன்பாடு இம்முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. காலணிகளை அணிய தடை விதிக்கப்படும்.
2023 – 24 கல்வியாண்டில் பெற்றோரின் ஈடுபாடு குறித்து கடுமையாக விதிமுறைகள் அமுல்படுத்தப்படும்.
தேர்வு தொடர்பாக பெற்றோர் அனுமதிக்க மாட்டார்கள். வினாத்தாள் கசிவு, முறைகேடு அபாயத்தை தணிக்கவும், நகலெடுக்கும் கடைகளை மூடுவதற்கும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கல்வி தேர்வின் முக்கியத்துவம், அதன் மோசடி முறைகேடுகள் தடுப்பதன் முக்கியத்துவம் பற்றி தாலுகா அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
தேர்வு எழுதும் அறைகளில் டி.வி.ஆர்., ருடன் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்படும். இதனால் நம்பகத்தன்மை, வெளிப்படைத்தன்மை இதில் இருக்கும். ஒரே பள்ளியை சேர்ந்த பணியாளர்கள் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது .இம்முறை எஸ்எஸ்எல்சி தேர்வு நியாயமான முறையில் முறைகேடுகளை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஆசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.