ஏகலைவா ஹள்ளிகர் நாட்டு காளை விலை ரூ. 26 லட்சம்

பெங்களூரு, நவ. 18: துருவேகெரேவை சேர்ந்த 4 வயது ஏகலைவா ஹள்ளிகர் நாட்டு காளையின் ரூ. 26 லட்சத்திற்கு விற்பனை வைத்துள்ளது நடப்பாண்டு விவசாய கண்காட்சியில் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. வேளாண் சந்தையின் கால்நடை பராமரிப்பு துறை அரங்கில் நிறுத்தப்பட்டுள்ள இந்த காளை மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள‌து. இந்த ஹள்ளிகர் காளையை துருவேக்கெரே முன்னாள் எம்எல்ஏவான மசாலா ஜெயராம் கொண்டு வந்து நிறுத்தி உள்ளார். இது குறித்து விவசாயி எடியூரப்பா கூறியதாவது: இந்த வகை காளைகளுக்கு வேகவைத்த வெண்டைக்காய், ரவை, தேங்காய், வெல்லம், இடித்த முட்டை, பச்சை வாழைப்பழம், வாரத்திற்கு ஒருமுறை வெண்ணெய் மற்றும் தினமும் காலை, மாலை இரண்டரை லிட்டர் பால் உள்ளிட்டவைகளை உண்ண வழங்க வேண்டும் என்றார்.