ஏசிபி பெயரில் மோசடி 3 பேர் கைது

பெலகாவி : ஜூன். 17 – பல்வேறு இலாக்காக்களின் அரசு அதிகாரிகளிடமிருந்து பணம் வசூல் செய்து வந்த மூன்று போலி ஊழல் ஒழிப்பு துறை ( ஏ சி பி ) அதிகாரிகளை சைபர் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். சதலகா பட்டணத்தை சேர்ந்த முருகெப்பா பூஜார (56) , பஸ்தவாடா கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் சாவ்குலே
மற்றும் ஹாசன் சக்லேஷ்புரத்தை சேர்ந்த ரஜனிகாந்த் ஆகியோர் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள். ஆர் டி ஓ , துணை பதிவாளர் , வருவாய் , வரி உட்பட பல இலாகா அதிகாரிகளுக்கு ஏ சி பி அதிகாரிகள் என மிரட்டல் விடுத்து பணத்தை வசூல் செய்துவந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அரசு துறை அதிகாரிகளையே குறியாக கொண்டு இவர்கள் அதிகாரிகளுக்கு தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்து தங்கள் கணக்கிற்கு பணத்தை மாற்றாவிட்டால் அலுவலகத்தின் கோப்புகளை பரிசீலனை செய்வதாக மிரட்டி வந்துள்ளனர். இது குறித்து நகரின் சைபர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகியிருந்தது .
பின்னர் இது குறித்து நடவடிக்கை மேற்கொண்ட போலீசார் போலி லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கும்பலை தேட துவங்கினர். சைபர் குற்ற
போலீஸ் நிலைய சி பி ஐ கட்டேகர் தலைமையிலான குழுவினர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.