ஏடிஎம் எந்திரம் உடைத்து கொள்ளை முயற்சி: ஆசாமி கைது

பெங்களூர், ஜன. 13- பெங்களூர் தொழிற்பேட்டை அருகே கர்நாடகா வங்கி ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி நடந்தது. கொள்ளையடிக்க முயற்சித்தவர் போலீசாரிடம் கையும் களவுமாக பிடிபட்டார் இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது-
பீகாரை சேர்ந்தவர் அமித் மிஸ்ரா. இவர் பல ஆண்டுகளுக்கு முன் வேலை தேடி பெங்களூர் வந்தார். ஜிகனி தொழிற்பேட்டையில் உள்ள பிரிக்ஸ் பாக்ஸ் என்ற கம்பெனியில் சேர்ந்து கொண்டார். இவர் குண்டி ரெட்டி என்ற இடத்தில் தங்கி வசித்து வந்தார்.
இவர் செய்யும் தொழிற்சாலையில் கிடைக்கும் வருமானம் போதவில்லை என்பதால் ஏடிஎம் உடைத்து கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். நேற்று குடித்துவிட்டு கர்நாடகா பேங்க் ஏடிஎம் வங்கிக்குள் நுழைந்து உள்ளார். ஏடிஎம் எந்திரத்தை உடைத்துள்ளார்.
அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவ்வழியே சென்றுள்ளனர். சப்தம் கேட்டு ஏடிஎம்கே வந்து உள்ளனர். என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று கேட்டபோது, ஏடிஎம் ரிப்பேர் செய்வதாக கூறியுள்ளார். சந்தேகம் ஏற்பட்டதால் அவரை போலீசார் கைது செய்தனர். விசாரித்தபோது, கொள்ளையடிக்க வந்தது தெரியவந்தது. இரண்டு ஏடிஎம்களில் பல லட்சம் ரூபாய் கொலை நடந்து இருக்கும். தற்செயலாக போலீசாரிடம் சிக்கியதால் அவர் கம்பி எண்ண வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவருடன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.