புதுடில்லி, ஜூலை 30- ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் செயல்பாடுகளில் 51 பாதுகாப்பு குறைபாடுகளை மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டி.ஜி.சி.ஏ.,) கண்டறிந்துள்ளது. கடந்த மாதம் 12ல் குஜராத்தின் ஆமதாபாதில் இருந்து லண்டன் புறப்பட்ட, ‘ஏர் இந்தியா போயிங் 787 – -8’ விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விழுந்து நொறுங்கியது. இந்த துயரச் சம்பவத்தின் முதற்கட்ட விசாரணை அறிக்கையில், விமானம் புறப்பட்டவுடன் இன்ஜின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள், ‘ரன்’ நிலையில் இருந்து, ‘கட் ஆப்’ நிலைக்கு மாறியதே விபத்துக்குக் காரணம் என குறிப்பிடப்பட்டது. இந்நிலையில், ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் செயல்பாடுகளை மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ஆய்வு செய்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் செயல்பாடுகளில் 51 பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டு உள்ளது. விமானிகளுக்கு போதுமான பயிற்சி இல்லை.












