ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை

மும்பை, நவ. 9- மும்பை பங்குச்சந்தையில் புதன்கிழமை வர்த்தக நேரத்தின் தொடக்கத்தில் சென்செக்ஸ் 251 புள்ளிகள்(0.41 சதவீதம்) வரை உயர்ந்து 61,371 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 56 புள்ளிகள்(0.31 சதவீதம்) உயர்ந்து 18,259 ஆக இருந்தது.
வங்கி, ஐடி பங்குகளின் வலுவான போக்கினால் இன்றைய பங்குவர்த்தகம் உயர்வுடனேயே தொடங்கியது. அனைத்து வகைப் பங்குகளும் நேர்மறை போக்கையே காட்டின. காலை 09:31 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 135.64 புள்ளிகள் ஏற்றத்துடன் 61,320.79 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் 55.35 புள்ளிகள் உயர்வுடன் 18,258.15 ஆக இருந்தது.உலகளாவிய வலுவான சந்தை போக்கு, அமெரிக்க வர்த்தக சந்தையின் சாதமான சூழல், எஃப்ஐஐ-ன் தொடர்ந்த முதலீடுகள் போன்ற காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் புதன்கிழமை உயர்வுடனேயே தொடங்கியது.