ஏழை குழந்தைகளை தெரியவில்லையா? – ராகுல் ஆவேசம்

லக்னோ: ஜன.6-
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3, 500 கிலோமீட்டர்கள் பாத யாத்திரையாக செல்லும் இந்த பயணம் 150 நாட்கள் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கிய இந்த யாத்திரை கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், அரியானா, டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்கள் வழியாக தற்போது உத்தர பிரதேசத்தைச் சென்றடைந்துள்ளது. இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் பேசிய ராகுல் காந்தி, தனது டீ -ஷர்ட் குறித்து சர்ச்சைகள் பரப்புவதாக தெரிவித்தார். குளிர்காலத்தில் ஏழை குழந்தைகளும், விவசாயிகளும், கூலி தொழிலாளிகளும் போர்வைகூட இல்லாமல், கிழிந்த ஆடையுடன் இருக்கின்றனர். பிரதமர் மோடியின் அரசு மக்கள் குறித்து சிந்திப்பதில்லை. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்துவதில்லை என குற்றம்சாட்டினார்.