ஐஐடி மாணவன் தற்கொலை

புதுடெல்லி : நவம்பர் 2 – பளு தூக்கும் கம்பத்தில் தூக்கு மாட்டிக்கொண்டு ஐ ஐ டி யில் படித்துவந்த டெல்லி மாணவன் ஒருவன் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. நான்காவது ஆண்டு பி டெக் படித்துவந்த மாணவன் பவன் ஜெயின் என்பவனின் இறந்த உடலை அவனுடைய பெற்றோர் இரவு நடை பயிற்சி சென்று திரும்புகையில் பார்த்துள்ளனர். பவன் தன் வீட்டில் பயன்படுத்திவந்த சுமை தூக்கும் எந்திர இரும்பு கம்பியில் தூக்கு மாட்டி இறந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.மாணவனின் பெற்றோர் அவனை உடனே புஷ்பாஞ்சலி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவன் ஏற்கெனவே இறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பவனின் தந்தை இது பற்றி கூறுகையில் தன்னுடைய மகன் கடந்த சில மாதங்களாக மன உளைச்சலால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் இதற்க்கு சிகிச்சையும் பெற்றுவந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். . பவனின் தற்கொலை குறித்து அவன் எந்த கடிதமும் எழுதி வைக்கவில்லை என போலீசார் தெரிவித்துள்னர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.