ஐசிஸ் தீவிரவாதிகளுக்கு என்ஐஏ நோட்டீஸ்

பெங்களூர் : அக்டோபர் . 17 – துங்கா நதி கரையில் சோதனை வெடிகுண்டு விவகாரம் தொடர்பாக தீர்த்தஹள்ளியை சேர்ந்த நான்கு பேருக்கு தேசிய புலனாய்வு துறை (என் ஐ ஏ ) அதிகாரிகள் நோட்டீஸ் அளித்துள்ளனர் . தீர்த்தஹள்ளியை சேர்ந்த சம்சுதீன் , ரிஸ்வான் , நஜீப் மற்றும் தவீம் ஆகியோருக்கு விசாரணைக்கு வருமாறு ஏன் ஐ ஏ அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர் . இம்மாதம் 16 மதியத்திற்குள் நகரின் ஏன் ஐ ஏ அலுவலகத்தில் விசாரணைக்கு வருமாறு நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது . 2022 அக்டோபர் 26 அன்று சிவமொக்கா அருகில் துங்கா நதிக்கரையில் நடந்த சோதனை வெடிகுண்டு விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே ஏன் ஐ ஏ அதிகாரிகள் இரண்டு பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். மாஜி முனீர் அஹமத் மற்றும் சையத் யாசின் ஆகியோருக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் பல சாட்ட பிரிவுகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐசிஸ் நடவடிக்கைகளை மாநிலத்தில் விரிவாக்க மற்றும் மாநிலத்தில் அஹிம்சை மற்றும் நாச வேலைகளில் ஈடுபட குற்றவாளிகள் திட்டம் தீட்டி வந்திருப்பதுடன் பி டெக் பட்டதாரிகளான இவ்விருவரும் 2022 அக்டோபர் 15 அன்று சிவமொக்காவில் பிரேம் சிங்க் என்பவரை கத்தியால் அறுத்துள்ளனர். மற்றும் கோதாமாக்கல் , மதுபான கடைகள் , மற்றும் இதர இடங்களில் கடைகள் மற்றும் வாகனங்களை சேத படுத்த சூழ்ச்சிகள் செய்திருந்தனர். அப்போது நம் தேசிய கொடியை கொளுத்தியும் உள்ளனர்.