ஐதராபாத் ரசாயன கிடங்கில் தீ விபத்து-7 பேர் பரிதாப சாவு

ஹைதராபாத்: நவம்பர். 13 – தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நம்பள்ளி பகுதியில் அடுக்கு மாடி குடியிருப்பின் கீழ் பகுதியில் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலியாகினர். இந்த தீ விபத்தில் சிக்கிய 16 பேரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். இதேபோல நாகாலாந்து மாநிலம் திமாப்பூரில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலியாகினர்.
ஹைதராபாத் நம்பள்ளி பஜார்காட் பகுதியில் இன்று காலை கெமிக்கல் குடோன் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த குடோனில் ஏராளமான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்ட நிலையில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டனர். இத் தீ மளமளவென பரவி மேலே இருந்த அடுக்குடிமாடி குடியிருப்புகளிலும் பரவியது. பெரும் போராட்டத்துக்குப் பின் தீயை அணைக்கப்பட்டது.