ஐபிஎல் 2021- பெங்களுரூ அணி வீரர் தேவ்தத் படிக்கலுக்கு கொரோனா தொற்று


பெங்களூரு, ஏப்.4-
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 9 ஆம் தேதி துவங்க உள்ளது.
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வரும் 9 ஆம் தேதி தொடங்குகிறது. சென்னையில் நடக்கும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.
போட்டி நடைபெற இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர் தேவ்தத் பட்டிக்கலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, உடனடியாக தேவ்தத் பட்டிக்கல் தனிமைப்படுத்தப் பட்டுள்ளார். ஏற்கனவே, டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர் அக்சர் படேல் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் நிதிஷ் ராணா ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.