ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு

திருவனந்தபுரம்: அக்.17
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஐப்பசி மாத பூஜைகளுக்காக இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படவுள்ளது. நாளை ஐப்பசி 1ம் தேதியை முன்னிட்டு காலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற உள்ளது.
கேரளத்தின் பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலையில் பிரம்மச்சாரி கோலத்தில் ஐயப்பன் அருள்பாலிக்கிறார். சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜையை தவிர, ஓணம், பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா, விஷூ பண்டிகை மற்றும் விசேஷ நாட்கள் தவிர ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் புரட்டாசி மாத பூஜையையொட்டி கடந்த 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. 17ஆம் தேதி முதல் வழக்கமான பூஜை, வழிபாடுகள் 5 நாட்கள் நடைபெற்றது.
ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் வரும் 17ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படும். 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
18-ந் தேதி முதல் 5 நாட்கள் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை. பஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெறும். 22-ந் தேதி அத்தாடி பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடன் இசைக்கப்பட்டு, இரவு 10 மணிக்கு கோவில் நடை அடக்கப்படும்
ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் நடக்கும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலைக்கு பக்தர்கள் யாத்திரை செல்வார்கள். அப்படி செல்பவர்கள் கடந்த 8ஆம் தேதி முதல் இணைய வழியில் முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்வதற்கு, சபரிமலையின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.sabarimalaonline.org என்ற முகவரியை பயன்படுத்தலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.