ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்பு

நியூயார்க், செப். 19- ஐ.நா. பொதுச்சபை-யின் 77-வது கூட்டத்தில் பங்கேற்பதற்காக வெளியுறவுத்துறை மந்திரி டாக்டர் எஸ். ஜெய்சங்கர் 10 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். மந்திரி ஜெய்சங்கர் தலைமையிலான இந்திய உயர்நிலைக் குழு நாளை (செப்டம்பர் 20) தொடங்கும் ஐ.நா பொதுச்சபையின் ஒருவாரகால கூட்டத்தில் பங்கேற்கிறது. வரும் 24-ஆம் தேதி நடைபெறும் சிறப்புக் கூட்டத்தில், 75-வது ஆண்டு சுதந்திர பெருவிழாவை இந்தியா கொண்டாடி வரும் வேளையில், ஐ.நா-வுக்கும் – இந்தியாவுக்கும் இடையேயான நல்லுறவு குறித்து மந்திரி ஜெயிசங்கர் உரையாற்றுகிறார். ஜி-20 மற்றும் ஐ நா பாதுகாப்பு உறுப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரியுடனும் இருதரப்பு உறவுகள் குறித்து அவர் கலந்துரையாடுகிறார். 25-ஆம் தேதியிலிருந்து 28-ஆம் தேதி வரை அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்டன் மற்றும் உயரதிகாரிகளுடன் இருதரப்பு உறவுகள் குறித்து அமைச்சர் பேச்சுக்கள் நடத்துகிறார். பிரிக்ஸ் மற்றும் க்வாட் அமைப்பு நாடுகளின் கூட்டங்களிலும் ஜெய்சங்கர் பங்கேற்கிறார்.