ஐ2-யு2 மெய்நிகர் உச்சி மாநாடு பிரதமா் மோடி பங்கேற்பு

வாஷிங்டன், ஜூன். 15 –
இந்தியா, இஸ்ரேல், மெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 4 நாடுகள், ஐ2-யு2 என்னும் நாற்கர பொருளாதார பேச்சுவாா்த்தை அமைப்பில் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
இந்த அமைப்பின் மெய்நிகா் உச்சி மாநாடு வருகிற ஜூலை மாதம் நடைபெற உள்ளது.
இந்த மெய்நிகர் உச்சி மாநாட்டில் பிரதமா் மோடி, அமொிக்க அதிபா் ஜோ பைடன், இஸ்ரேல் பிரதமர் நெப்தாலி பென்னட் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோா் பங்கேற்க உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்து உள்ளது.
மேலும், இந்த மெய்நிகர் உச்சி மாநாட்டில் உணவுப் பாதுகாப்பு நெருக்கடி மற்றும் பிற பிரச்சனைகள் குறித்து விவாதிக்க உள்ளதாக அந்த அறிவிப்பில் தொிவிக்கப்பட்டுள்ளது.