ஒகலிபுரம் கீழ்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் – மக்கள் அவதி

பெங்களூரு, அக். 7- கே.எஸ்.ஆர் ரயில் நிலையத்தின் அருகே உள்ள‌ ஒகாலிபுரா கீழ்பாலத்தில், தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், அவ்வழியாக செல்லும் மக்கள் அவதிப்படுகின்றனர். வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பெரும்பாலான வாகனங்கள், டாக்டர் ராஜாஜிநகர் சாலை, ஒகலிபுரம் சாலை வழியாக மெஜஸ்டிக்கை அணுகப்படுகிறது. இதே வழித்தடத்தில் உள்ள ஒகலிபுரம் கீழ்ப்பாலம் குறுகலாக உள்ளதால், வாகனங்களின் வேகம் குறைந்து,
நெரிசல் ஏற்படுகிறது. லோயர் பிரிட்ஜ் சாலையை ஒட்டியுள்ள சேஷாத்ரிபுரம் ரயில்வே இணைச் சாலையிலும் நெரிசல் காணப்படுகிறது. பெங்களூரு மேற்குப் பகுதியில் உள்ள விஜயநகர், ராஜாஜிநகர், பசவேஷ்வர்நகர், காமக்ஷிபாளையா,
மாகடி சாலை, மகாலட்சுமி லேஅவுட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் தினசரி வேலை மற்றும் சந்தைக்கு ஒகலிபுரம் கீழ்ப்பாலத்தை பயன்படுத்துகின்றனர். ஒகலிபுரம் சாலையில் பல ஆண்டுகளாக போக்குவரத்து பிரச்னை இருந்தது. ரயில் நிலையத்தை ஒட்டி சாலை இருந்ததால், வாகன போக்குவரத்து அதிகமாக இருந்தது. இதற்கு தீர்வாக, ஒகலிபுரம் சாலை அகலப்படுத்தப்பட்டு, மேம்பாலங்களும் கட்டப்பட்டன. ஆனால், இப்பணியின் வடிவமைப்பு அறிவியல்பூர்வமற்றதாக உள்ளதால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அப்பகுதியில் உள்ள முக்கிய சாலைகள் அகலப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், கீழ்ப்பாலம் மட்டும் பழையபடியே உள்ளது. அகலப்படுத்தப்பட்ட சாலையில் வரும் வாகனங்கள் கீழ்ப்பாலம் அருகே குவிகின்றன. கீழ்பாலத்தை வாகனங்கள் ஒவ்வொன்றாக கடக்க வேண்டிய நிலை உள்ளது.
கே.எஸ்.ஆர் ரயில் நிலையத்திலிருந்து (8வது நடைமேடை) வெளியே வந்து மெஜஸ்டிக் செல்வோருக்காக தனி மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேல்பாலத்தில் இருந்து வருபவர்களும் கீழ்ப்பாலம் வழியாக செல்ல வேண்டும். மெயின்ரோடு மற்றும் மேல்பாலத்தில் செல்லும் வாகனங்கள் கீழ்பாலத்தின் முன் வரிசையாக நின்று மெதுவாக செல்கின்றன. ரயில்வே கீழ்பாலத்தில் மழை பெய்தால் ஓடை போல் தண்ணீர் தேங்குகிறது. தாழ்வான பாலத்தின் அடியில் இரண்டு கால்வாய்கள் உள்ளன. அங்கும் தண்ணீர் தேங்குகிறது. இன்னும் தண்ணீர் தேங்குவதை முழுமையாக நிறுத்த முடியவில்லை. தற்காலிகமாக சீரமைப்பு பணிகள் மட்டுமே நடைபெற்று வருகிறது. அதனால் அங்கு எந்த ஒரு நிரந்தர தீர்வும் காணப்படவில்லை பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.