ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு தடைதர்மபுரி,ஏப்.19-
தருமபுரி மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலமான ஒகேனக்கல்லிற்கு உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகைக்கும், நீர்வீழ்ச்சியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் வருகின்ற 20.4.2021 முதல் தடை விதித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியர் கார்த்திகா இன்று உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, இந்த நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளதாகமாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.