ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு

தருமபுரி/மேட்டூர்: செப்டம்பர் 9- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 5-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
இந்நிலையில், நேற்று காலை விநாடிக்கு 6,500 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், தமிழகத்தை நோக்கி வரும் காவிரி ஆறு அமைந்துள்ள பகுதிகளிலும் சில நாட்களாக பெய்த மழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 3,031 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 4,987 கனஅடியாக அதிகரித்தது. காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 6,500 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் நேற்று 46.57 அடியாகவும், நீர் இருப்பு 15.72 டிஎம்சியாகவும் இருந்தது.