ஒப்பந்தக்காரர்கள் மற்ற தலைவர்களைச் சந்திப்பதை தடுக்க முடியாது

பெங்களூரு, ஆக.8- ஒப்பந்ததாரர்கள் யாரையும் சந்திக்கலாம். அவர்களை நம்மால் தடுக்க முடியாது.என்று துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் கூறினார். கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒப்பந்ததாரர்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும். செல்பவர்களை யாராலும் தடுக்க முடியாது. அவர்களின் போராட்டம் வெற்றி பெறட்டும். அனைத்தையும் கவனித்து வருகிறோம். நீதியுடனும், நெறிமுறைகளுடனும் நாங்கள் அரசாங்கத்தை நடத்தி வருகிறோம் என்றும், அதனை தொடர்ந்து முன்னெடுப்போம் என்றும் அவர் கூறினார்.
வழக்கறிஞர்கள் சங்க நிகழ்ச்சியின் அழைப்புக் கடிதத்தில் இருந்து தனது பெயர் நீக்கப்பட்ட விவகாரம் குறித்துப் பதிலளித்த அவர் வழக்கறிஞர்கள் சங்கத் திட்டத்தில் இருந்து என்னை ஒதுக்கிவைத்ததற்கு எனக்கு எந்த வருத்தமும் இல்லை. இந்த நாட்டில் ஒவ்வொருவரும் தங்கள் சொந்த முடிவுகளை எடுக்க சுதந்திரமாக உள்ளனர். அதனால் எனக்கு எந்த சங்கடமும் இல்லை, என்றார்.
ஆனால் சுரேஷ் குமாரிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். எடியூரப்பா மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன. அவர் முதலமைச்சராக இருந்த காலத்தில் நீதித்துறையின் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். அவர்களுடன் கலந்து கொண்டேன். அவர்களை விசாரிக்காமல் இப்போது ஏன் என்னை குறிவைக்கிறீர்கள்? சுரேஷ் குமாரின் நாக்கும், வேறொருவர் மேடை ஏறியபோது கேள்வி கேட்காத பாஜக நண்பர்களின் நாக்கும் அமைதியாக இருந்தது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
எம்எல்ஏக்கள் வெளிநாட்டு பயணத்திற்கு அனுப்பப்படுவார்கள் என சபாநாயகர் யு.டி.காதர் தெரிவித்துள்ளார். சபாநாயகரின் முடிவில் நாங்கள் மூக்கை நுழைக்க மாட்டோம், அவர் சுதந்திரமான முடிவை எடுப்பார் என்று கூறினார்