ஒப்பந்ததாரர் வீட்டில் ரூ.42 கோடி பறிமுதல்

பெங்களூரு,அக்13-  5 மாநிலங்களில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு பெங்களூரில் இருந்து நிதியுதவி அளிக்கப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று தொடங்கிய சோதனை இன்றும் நீடித்தது. ஒப்பந்ததாரர் வீட்டில் 42 கோடி கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த 500 ரூபாய் நோட்டுகள் அட்டை பெட்டிகளில் வைக்கப்பட்டு இருந்தது. முன்னாள் கவுன்சிலர் வீடு மற்றும் அவரது உறவினர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி இந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.  பெங்களூரின் முன்னாள் மாநகராட்சி உறுப்பினர் மற்றும் அவருடைய உறவினர்கள் வீடுகளில் சோதனைகள் நடத்தி சுமார் 42 கோடி ரூபாய்களை கைப்பற்றியுள்ளனர் . நகரின் முன்னாள் மாநகராட்சி உறுப்பினர் அஸ்வத்தம்மா என்பவரின் கணவன் மற்றும் பி ஜே பி ஆட்சியிலிருந்தபோது 40 சதவிகித கமிஷன் குற்றச்சாட்டு செய்த குத்தகையாளர்களில் ஒருவரான அம்பிகாபதி என்பவருக்கு சொந்தமான குடியிருப்பில் 42 கோடி ரூபாய்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது . இந்த பணத்தை வெளிமாநிலங்களுக்கு தேர்தல் செலவுக்காக அனுப்ப சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது . நகரில் பல பகுதிகளில் சரித்திரிலேயே முதல் முறையாக மேற்கொண்டுள்ள இந்த சோதனைகளில் மிக பெரிய அளவில் 42 கோடி ரூபாய்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது . இந்த வருமானவரி துறை சோதனைகளின் போது குடியிருப்பு ஒன்றில் பூட்டி வைக்கப்பட்டிருந்த அறையில் இருந்த கட்டிலின் கீழே கண்டெடுக்கப்பட்டுள்ள 42 கோடி ரூபாய்கள் ராஜஸ்தான் தேர்தலுக்கு இங்கிருந்தே பணம் அனுப்பப்பட்டுவருவதாகசந்தேகம் எழுந்துள்ளது .

நகரில் நேற்று அதிகாலை முதல் நள்ளிரவு வரை நடந்த சோதனைகளின்போது 23 அட்டை பெட்டிகளில் கத்தை கத்தையாக பணம் கிடைத்திருப்பதுடன் அனைத்துமே 500 முக மதிப்பு கொண்ட நோட்டுகளாகும் . கோடிக்கணக்கில் பணம் கிடைத்துள்ள காலியாக இருந்த குடியிருப்பு குத்தகையாளர்கள் சங்க துணை தலைவரான அம்பிகாபதி என்பவரின் மனைவி முன்னாள் மாநகராட்சி உறுப்பினர் அஸ்வத்தம்மா என்பவரின் உறவினருக்கு சொந்தமானதாகும் . இது குறித்து பல கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது . . மாநிலத்தில் வருமானவரித்துறை இதுவரை நடத்திய சோதனைகளில் கிடைத்திராத பெருமளவிலான தொகை இது ஆகும். நாட்டின் ஐந்து மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டபின்னர் நகரில் கண்டெடுக்கப்பட்டுள்ள பெருமளவிலான பணம் குறித்து இந்த பணங்கள் எங்கு கொண்டு செல்ல  திட்டமிருந்தன , மற்றும் இந்த பணம் யாருக்கு சேர்ந்தவை மற்றும் எங்கிருந்து வந்தன ஆகியவை குறித்து வருமானவரித்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆர்.டி.நகர் ஆனந்த் காலனியைச் சேர்ந்த அஸ்வத்தம்மா, கடந்த 2001ம் ஆண்டு காவல் பைரசேந்திரா (வார்டு எண்.95) கார்ப்பரேட்டராக இருந்தார் இவர் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அகண்ட சீனிவாசமூர்த்தியின் அக்கா.  இவரது கணவர் ஆர். அம்பிகாபதி ஒப்பந்ததாரர் மற்றும் கெம்பண்ணா ஒப்பந்ததாரர் சங்கத்தில் அங்கீகரிக்கப்பட்டவர்.கடந்த பா.ஜ., ஆட்சியில், சில அரசியல் பிரமுகர்கள், மாநிலத்தில் நடக்கும் பணிகளுக்கு, 40 சதவீதமும், பி.பி.எம்.பி.,யில், 50 சதவீதமும் வழங்குவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது., ஆர்.டி. நகரில் உள்ள அம்பிகாபதி மகள் வீடு, மான்யதா டெக் பார்க் அருகே உள்ள ஒரு வீடு, ஆர்.டி.நகர் சுல்தான் பாளையத்தில் 2 இடங்களில் ஐ.டி அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஒப்பந்ததாரர் வீட்டில் 42 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ள விவகாரம் பெங்களூர் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைஏற்படுத்தி உள்ளது.