ஒய்எஸ்ஆர் காங்கிரசில் கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு

திருமலை: டிச. 29:
முதல்வர் ஜெகன்மோகன் முன்னிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவர் குண்டூர் மாவட்டத்தில் இருந்து போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தடேபள்ளியில் உள்ள முகாம் அலுவலகத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் அம்பதிராயுடு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் நேற்று இணைந்தார். முதல்வர் ஜெகன்மோகன் அவரை கட்சியில் வரவேற்று கட்சி சால்வை அணிவித்தார். விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் அம்பதி ராயுடு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் குண்டூர் மாவட்டத்தில் இருந்து போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.