ஒய்எஸ் ஷர்மிளா குற்றச்சாட்டு

அமராவதி, மார்ச் 8- “ஆந்திராவில் பாஜகவுக்கு ஒரு எம்பி, எம்எல்ஏ கூட கிடையாது. ஆயினும் இங்கு பாஜக ஆட்சிதான் நடக்கிறது” என அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒய்எஸ் ஷர்மிளா குற்றம் சாட்டியுள்ளார்.அமராவதியில் உள்ள மங்களகிரியில் அமைந்துள்ள மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று அக்கட்சியின் மாநிலதலைவர் ஒய்எஸ் ஷர்மிளா கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடையே பேசுகையில், “ஆந்திர மாநில வளர்ச்சிக்கு சிறப்பு அந்தஸ்து மிக மிக முக்கியம். தாய் போன்ற தனது மாநிலத்தின் முதுகில் குத்தி உள்ளார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. இவர் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்துக்காக போராட்டம் செய்துள்ளார். ஆனால், இவர் முதல்வரான பின்னர் ஒருமுறை கூட இது குறித்து எங்குமே வாய் திறக்கவில்லை. மாநில அந்தஸ்து என்பது நமது உரிமை. அது மட்டும் வந்திருந்தால் நாம் இம்மாநிலத்திற்கு தலைநகரம், போலாவரம் அணைக்கட்டு போன்றவற்றை கட்டி முடித்திருப்போம். நம் பிள்ளைகள் வேலை தேடி அண்டை மாநிலங்களுக்கோ அல்லது வெளிநாடுகளுக்கோ செல்ல வேண்டிய நிலை வந்திருக்காது.