ஒரு கிலோதக்காளி விலை 14 ரூபாய்

பெங்களூர், ஆக. 28- கடந்த வாரம் தக்காளி விலை 180 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்பனை ஆனது.
தற்போது இதன் விலை மிகவும் குறைந்துவிட்டது. இதனால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை ஏ .பி. எம். சி. சந்தையில் ஒரு கிலோ தக்காளி 14 ரூபாய்க்கு விற்கப்பட்டது
சனிக்கிழமை 20 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி ஞாயிற்றுக்கிழமை இது 14 ரூபாயாக குறைந்தது.
பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை ஒரு கிலோ தக்காளி 30 முதல் 35 ரூபாய்க்கு மட்டுமே விற்கப்பட்டது.
இங்கிருந்து நேபாள் நாட்டிற்கு அனுப்பப்படும் தக்காளி குறைந்து விட்டதால், தக்காளி விலையும் சரிந்து விட்டது.
கிலோ ஒன்றுக்கு பத்து முதல் ஐந்து ரூபாய் வரை மொத்த வியாபாரத்தில் குறைந்துள்ளது என்று மைசூர் ஏ பி எம் சி செயலாளர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.நாள்தோறும் ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டுக்கு 40 குவிண்டால் தக்காளி வரத்து உள்ளது.தக்காளி விலை குறைவு குறித்து, கர்நாடக மாநில விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் இம்மவு ரகு கூறுகையில் தக்காளி விலை வீழ்ச்சிக்கு அரசு தலையிட்டு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். விவசாயிகள் பெரிதும் பாதித்து உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.ஒரு கிலோ தக்காளி உற்பத்தி செய்ய 10 முதல் 12 ரூபாய் செலவாகிறது. மேலும் போக்குவரத்து வாகன போக்குவரத்து வாகன செலவு மூன்று ரூபாய் தேவைப்படுகிறது.ஆக ஒரு கிலோ தக்காளிக்கு அசல் 14 ரூபாய் ஆகிறது.எனவே தக்காளி உற்பத்தியாளர்கள் செலவிடும் தொகை கிடைப்பது கடினமாகியுள்ளது. இதன் பேரில் அரசு தலையிட்டு, விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.