ஒரு நாள் போட்டிகளில் 50வது சதம் – கோலி புதிய உலக சாதனை

மும்பை,நவ.15-
உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த ஆட்டத்தில் 106 பந்துகளில் ஒரு சிக்ஸ், 8 பவுண்டரிகளுடன் விராட் கோலி சதமடித்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் தனது 50-வது சதத்தை விராட் கோலி பூர்த்தி செய்தார். ஒருநாள் போட்டிகளில் சச்சின் தெண்டுல்கர் 49 சதங்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. இந்த நிலையில் விராட் கோலி 50- வது சதமடித்து அந்த சாதனையை முறியடித்துள்ளார். 279 ஒருநாள் இன்னிங்சில் விளையாடியுள்ள விராட் கோலி தனது 50-வது சதத்தை நிறைவு செய்தார்.
உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த சச்சின் சாதனையை விராட் கோலி சற்று முன் முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வான்கடே மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில்
கோஹ்லி தனது 50வது சதத்தை அடித்த போது, ​​மைதானத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
மைதானத்தில் போட்டியை பார்த்து கொண்டிருந்த சச்சின் டெண்டுல்கர் எழுந்து நின்று கைதட்டி கோஹ்லிக்கு வாழ்த்து தெரிவித்தார். பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோர் சிரித்துக்கொண்டே கோஹ்லிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
கோஹ்லி தனது 35வது பிறந்தநாளில் 49வது சதத்தை விளாசினார்.
சச்சின் டெண்டுல்கர் 452 இன்னிங்ஸ்களில் 49 சதங்கள் அடித்துள்ள நிலையில், கோஹ்லி இந்த சாதனையை 277 இன்னிங்ஸ்களில் மட்டுமே எட்டியுள்ளார். இன்று நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 106 பந்துகளில் 8 பவுண்டரி, 1 சிக்சருடன் சிடிசி சதம் அடித்து உலக படைத்தார். விராட் கோஹ்லிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்