ஒரு மாதம் தள்ளிப் போகும் காங்கிரஸ் தலைவர் தேர்தல்

புதுடெல்லி: ஆகஸ்ட். 26 – காங்கிரஸ் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பதவி வகித்து வருகிறார். புதிய தலைவரை தேர்வு செய்ய செப்டம்பர் 20-ம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, செப்டம்பர் 7-ம் தேதி, பாரத் பாதயாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர்வரை பாத யாத்திரை தொடங்குகிறது. இந்நிலையில், பாதயாத்திரை பணிகளில் கவனம் செலுத்த வேண்டி இருப்பதாலும், சில மாநிலங்கள் தலைவர் தேர்தலுக்கான நடைமுறைகளை முடிக்காததாலும் தலைவர் தேர்தல் ஒரு மாதம் தள்ளி போகும் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி, அக்டோபர் மாதம் காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடக்கிறது. வரும் 28-ம் தேதி காங்கிரஸ் காரிய கமிட்டி கூடி, தேர்தல் தேதியை முடிவு செய்கிறது.