ஒரு வாரம் கழித்து இரண்டாவது கன்றை ஈன்ற எருமை

சிக்கமகளூர், ஜன.12-
சிக்கமகளூரில் எருமை மாடு ஒன்று, ஆண் கன்று ஈன்று, எட்டு நாட்களுக்குப் பிறகு மற்றொரு கன்றை ஈன்றுள்ள விசேஷமான சம்பவம் நடந்துள்ளது. சிக்மகளூர் மாவட்டம், என். ஆர்.பூர் தாலுக்கா, சங்கர்பூர் அருகே, மதுபா சாலையில் ,ஹாலியூரை சேர்ந்த சுதாகர் கவுடா என்பவர், வளர்த்து வந்த எருமை மாடு கடந்த செவ்வாய்க்கிழமை ஆண் குட்டி ஒன்றை ஈன்றது.
அதே எருமை மாடு எட்டு நாட்களுக்குப் பின் மற்றொரு ஆண் கன்று ஈன்றது. இது ஆச்சரியமான சம்பவம் என்று சுதாகர் கவுடா தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், நான் பல ஆண்டுகளாக மாடுகளை வளர்த்து வருகிறேன். இந்த எருமை கன்று ஈன்று எட்டு நாட்களுக்குப் பின் மற்றொன்று கன்றை ஈன்றது.இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால், இந்த எருமை மாட்டுக்கு செயற்கை கருவூட்டல் செய்யவில்லை. ஏற்கனவே இது குறித்து கால்நடைத்துறை கவனத்திற்கு கொண்டுச் சென்றேன்.அவர்கள் வந்து பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.
கால்நடை உதவி இயக்குனர் டாக்டர் சிவக்குமார் இது பற்றி தெரிவிக்கையில், இதுபோன்ற சம்பவம் மாவட்டத்தில் நடந்திருப்பது இதுவே முதல் சம்பவம்.
பன்றிகள் ஈன்ற ஒரு வாரத்திற்கு பிறகு மற்றொரு குட்டியை பிரசவிக்கும். இது வழக்கத்தில் பார்த்திருக்கிறோம். ஆனால் எருமை மாடு எட்டு நாட்களுக்குப் பிறகு இன்னொரு குட்டியை ஈன்றிருப்பது அரிதான காரியம். அபூர்வமானது என அவர் தெரிவித்துள்ளார்.