ஒரேநேரத்தில் 4 வான்வழி இலக்கை தாக்கியது ஆகாஷ்: டிஆர்டிஓ அறிவிப்பு

புதுடெல்லி: டிச. 18: இந்தியாவின் பாதுகாப்புத்துறை அபரிமித வளர்ச்சி பெற்று வருகிறது. இந்தியாவிலிருந்து டார்னியர்-228 விமானம், 155 மிமீ ஏடிஏஜி பீரங்கி துப்பாக்கிகள், பிரம்மோஸ் ஏவுகணைகள், சுரங்க பாதுகாப்பு வாகனங்கள், கவச வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ராணுவ ஆயுதங்கள் நட்பு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.இந்நிலையில் கடந்த டிசம்பர் 12ம் தேதி நடைபெற்ற அஸ்த்ரசக்தி ராணுவ பயிற்சியில் இந்திய விமானப்படையின் 25 கிமீ தூரம் செல்லக்கூடிய ஆகாஷ் ஏவுகணையின் திறன் சோதனை செய்யப்பட்டது. இதுகுறித்து இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வௌியிட்டுள்ள அறிவிப்பில், “ 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 4 வான்வழி இலக்குகளை ஒரேநேரத்தில் தாக்கும் ஆகாஷ் ஏவுகணையின் திறனை இந்தியா நிரூபித்துள்ளது. இந்த திறனை வௌிப்படுத்திய முதல்நாடு இந்தியா” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.