ஒரே குடும்பத்தில் 4 பேரைக் கொன்ற குற்றவாளி கைது

உடுப்பி: நவம்பர் 15 – கடலோர மாவட்டத்தில் மக்களை அதிர்ச்சி ளிக்கும் விதத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரை கொலை செய்து விட்டு தப்பியோடியிருந்த கொலையாளிகளை பெலகாவி மாவட்டத்தின் ராயபாகா தாலூகாவில் குடச்சி என்ற கிராமத்தில் கைது செய்வதில் மாவட்ட போலீசார் வெற்றியடைந்துள்ளனர் . கடந்த நவம்பர் 12 அன்று காலை உடுப்பியின் நேஜாரு என்ற இடத்தில் நான்கு பேரை கொலை செய்து விட்டு தலைமறிவாகியிருக்த கொலையாளிகளை கண்டுபிடிக்க அமைக்கப்பட்ட ஐந்து சிறப்பு படைகள் இரவு பகலாக உழைத்து நடவடிக்கை மேற்கொண்டு நம்பகமான தகவல்களின் பேரில் ராயபாக் தாலூகாவின் குடச்சி என்ற இடத்தில இருந்து கொலையாளிகளை கைது செய்து நகருக்கு அழைத்து வந்து தீவிர விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர் . நேஜாரை சேர்ந்த ஹசீனா (48) . அப்னான்(23) , அய்நாஜ் (20) மற்றும் அசீம் (20) ஆகியோர் கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்துவிட்டு தலைமறைவாகி குடச்சியில் உள்ள தங்கள் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்தநிலையில் குற்றவாளி மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பிரவீன் அருண் என்பவனின் மொபைல் போன் டவரை வைத்து குற்றவாளிகள் அணைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செயற்பட்ட குற்றவாளி பிரவீன் அருண் சோகளே ஏற்கெனவே மங்களூர் விமான நிலையத்தில் வேலை பார்த்து வந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த கொலைகள் எதற்காக நடத்தப்பட்டன என்பதற்கான காரணம் இன்னும் முழுதுமாக தெரியவரவில்லை. கொலையாளியை உடுப்பிக்கு அழைத்து வந்துள்ள போலீசார் அவனிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளவுள்ளனர் . ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் கொலையுண்டுள்ள நிலையில் அனைத்து கோணங்களிலும் விசாரணை மேற்கொள்ள உள்ளது. இந்த சம்பவத்தில் நான்கு பேர் கொலையுண்டிருப்பதுடன் வீட்டின் எஜமானிக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் . . வீட்டில் எந்த பொருளும் திருடப்பட்டதாக சாட்சிகள் இல்லை. குற்றவாளிகளை தீவிரமாக விசாரித்த பின்னரே இந்த கொலைகளுக்கான உண்மையான காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.