ஒரே குடும்பத்தில் 8 பேர் உயிரிழப்பு

லக்னோ: ஜூன் 13- ஜூன் 13-உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இருந்து மணல் ஏற்றிய லாரி ஒன்று நேற்று அதிகாலையில் ஹர்தோய் நோக்கி சென்று கொண்டிருந்தது.
இந்நிலையில் ஹர்தோய் நகரில் உன்னாவ் சாலையில் உள்ள சுங்கக் சாவடிக்கு அருகில் இந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலைக்கு அருகில் இருந்த குடிசை மீது கவிழ்ந்தது. மணல் குவியல் மற்றும் குடிசைக்கு அடியில் சிக்கியிருந்த 9 பேர் போலீஸாரால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும் இவர்களில் 8 பேர் ஏற்கெனவே இறந்துவிட்டனர். இறந்த 8 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்
லாரியின் டிரைவர் அவதேஷ், அவரது உதவியாளர் ரோகித் ஆகியோரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.