ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மர்ம சாவு

ராய்ப்பூர் (ராஜஸ்தான்) மே. 14 – இங்குள்ள வீடு ஒன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் சந்தேகத்துக்கிடமான நிலையில் இறந்துள்ள சம்பவம் இந்த தாலூக்காவின் டில்கா என்ற கிராமத்தில் நடந்துள்ளது. வீட்டின் வெளிப்புறம் திரைகள் மூடப்பட்டு வீட்டின் உள்ளே விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன . இதனால் பொதுமக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. வீட்டுக்குள் இறந்தவர்கள் தொழிலதிபர் பங்கஜ் ஜெயின் , அவருடைய மகள் ருச்சி மற்றும் இவரின் இரண்டு மகன்களான பிட்டு மற்றும் பயா என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் பங்கஜ் ஜெயினின் உடல் நிலத்தில் கிடந்திருந்த நிலையில் அவருடைய உடலின் அருகில் இரும்பு கம்பி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. தவிர வேரோரு அறையில் அவருடைய மனைவியின் உடல் மின்விசிறியில் தூக்கு மாட்டிக்கொண்ட நிலையில் இருந்துள்ளது. மற்றும் இன்னொரு அறையில் இறந்து போன இவரின் இரண்டு மகன்களின் உடல்கள் கிடைத்துள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். முதல் கட்ட தகவல்களின்படி இவை அனைத்தும் கொலை என போலீசார் சந்தேகிக்கின்றனர். தவிர போலீசார் அருகில் உள்ள சி சி டி வி பதிவுகளை ஆராய்ந்து வருவதுடன் அந்த சரக போலீசார் தகவல்களை சேகரித்து வருகின்றனர்.