ஒரே சட்டைக்குள் நாயகன் – நாயகி…

ஒரே சட்டைக்குள் நாயகன் – நாயகி இருவரும் இருக்கும் புகைப்படம் வெளியாகி சமூகவலைதளங்களில் பரபரப்பாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் சில படங்கள் போஸ்டரிலேயே பரபரப்பை ஏற்படுத்தும். அப்படி நாயகன் – நாயகி இருவரும் ஒரே சட்டைக்குள் இருக்கும் படம் வெளியாகி அது சமூகவலைதளங்களில் பரபரப்பாகி உள்ளது. பழகிய நாட்கள் என்ற படத்தின் போஸ்டர் அது. மீரான் என்ற புதுமுகம் இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக மேகனா நடித்துள்ளார்.
மேலும் இப்படத்தில் பிரபல நாட்டுப்புற பாடகர் செந்தில் கணேஷ், இயக்குனர் ஸ்ரீநாத், வின்சென்ட் ராய், சுஜாதா, நெல்லை சிவா, சிவக்குமார், மங்கி ரவி ஆகியோர் நடித்து உள்ளனர்.இளம் வயதில் ஏற்படும் காதல் எவ்வாறு முடிவுறுகிறது. அதே பக்குவப்பட்ட காதல் அவர்களின் வாழ்வியலை எவ்வாறு உறுதிப்படுத்துகிறது என்பதை கூறும் காதல் கதை இந்த படம்.
இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ராம்தேவ் இயக்கி உள்ளார். ஜான் ஏ. அலெக்ஸிஸ் – ஷேக் மீரா இசையமைத்துள்ள இப்படத்திற்கு பிலிப் விஜயக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒரே சட்டைக்குள் இருவரும் இருக்கும் படத்தை பார்த்த ரசிகர்கள் ‘யார் அந்த தையல்காரர்?’ என்று கேட்டு கிண்டல் செய்து வருகிறார்கள்.